நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கரோனா வைரஸ் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் ஒருபகுதியாக, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வழங்கவும், சுத்தமாக இருப்பது குறித்து பயிற்சி அளிக்கவும் 45 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர், ஒரு செவிலியர் என 3 பேர் இடம்பெற்றுள்ளனர். நடமாடும் மருத்துவக் குழுவினருக்கான வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வெளி மாநிலங்களுக்குச் சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்கள், ரிக் வண்டி தொழிலாளர்கள், வெளிநாடு சென்று திரும்பியவர்கள் உள்ளிட்டோரை பரிசோதனை செய்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். இந்தப் பரிசோதனையின்போது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தமிழ்நாட்டில் எண்ணிக்கை 3ஆக உயர்வு!