ETV Bharat / state

'காழ்ப்புணர்ச்சியால் தாக்கப்பட்டேன்' - பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்!

author img

By

Published : Sep 12, 2019, 10:57 AM IST

Updated : Sep 12, 2019, 1:16 PM IST

நாமக்கல்: தலைமை ஆசிரியர் தன்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் சத்துணவு அமைப்பாளருடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியதால் பொதுமக்களால் தாக்கப்பட்டேன் என ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Namakkal sexual allegation teacher

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ். உடுப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சரவணனும் அதேப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தின் அங்கன்வாடி அமைப்பாளரான ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலேயே பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறி பொதுமக்கள் ஆசிரியர் சரவணனுக்கு தர்ம அடி கொடுத்து புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் சரவணன் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர் சரவணன் தெரிவித்ததாவது, பள்ளி வளாகத்தில் நடந்த தாக்குதலுக்கு தலைமையாசிரியர் தன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியே காரணம். தான் பட்டியல் இனத்தை சார்ந்தவன் என்பதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்கு அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமாரிடம் கேட்ட போது, இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் சம்பவம் குறித்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர், தலைமையாசிரியர், பெற்றோர், ஊர்மக்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர் சரவணன் பேட்டி

ஆசிரியர் சரவணன் 2012ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கையாடல் செய்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Intro:நாமக்கல் அருகே ஊர் பொதுமக்கள் தாக்கிய ஆசிரியர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.. காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊர் பொதுமக்களும் தலைமையாசிரியரும் பொய்யான குற்றச்சாட்டு தெரிவிப்பதாக பேட்டிBody:நாமக்கல் அருகே ஊர் பொதுமக்கள் தாக்கிய ஆசிரியர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.. காழ்ப்புணர்ச்சி காரணமாக ஊர் பொதுமக்களும் தலைமையாசிரியரும் பொய்யான குற்றச்சாட்டு தெரிவிப்பதாக பேட்டியளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றும் வரும் ஆசிரியர் சரவணனும் அதே பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் அங்கன்வாடி பணியாளரான ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட்டதாக கூறி ஊர் பொதுமக்கள் ஆசிரியர் சரவணனுக்கு தர்ம அடி கொடுத்து புதுச்சத்திரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ஊர் பொதுமக்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணன் இன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆசிரியர் சரவணன் கூறும்போது "நேற்று பள்ளி வளாகத்தில் 20 க்கும் மேற்பட்டோர் தான் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தலைமையாசிரியர் தன்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இச்சம்பவம் நடைப்பெற்ற தாகவும் தான் தலீத் சமூகம் என்பதால் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்கு அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்".

மேலும் இதுக்குறித்து மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமாரிடம் கேட்ட போது இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் சம்பவம் குறித்து பள்ளிமாணவர்கள், ஆசிரியர் தலைமையாசிரியர், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அதன்பிறகே அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

"ஆசிரியர் சரவணன் கடந்த 2012 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கையாடல் செய்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் பணியிடை நீக்கம் செய்யபட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது".Conclusion:
Last Updated : Sep 12, 2019, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.