ETV Bharat / state

'அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன்' - சின்ராஜ் உறுதி! - பரப்புரை

நாமக்கல்: தேர்தல் பரப்புரையின் போது கூறிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன் என்று நாமக்கல் தொகுதியில் வெற்றிப் பெற்ற கொமதேக வேட்பாளர் சின்ராஜ் உறுதியளித்தார்.

சின்ராஜ்
author img

By

Published : May 23, 2019, 10:06 PM IST

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. நாமக்கலில் காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ், அதிமுக சார்பில் காளியப்பன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சாமிநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் பாஸ்கரன் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர். நாமக்கல்லில் மொத்தம் 11,29,610 பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியிருந்தனர்.

இதில், திமுக வேட்பாளர் சின்ராஜ் 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட காளியப்பன் 3,61,142 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்று படுதோல்வி அடைந்தார். மூன்று இடமாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாஸ்கரன் 38,531 வாக்குகளையும் பெற்றார். திமுக வேட்பாளர் சின்ராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காளியப்பனை விட 2,65151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சின்ராஜ்

பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெற்றி பெற்ற வேட்பாளர் சின்ராஜாக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்ராஜ், "தேர்தல் பரப்புரையின் போது கூறிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன். தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஊதியத்தை தொகுதி மக்களின் நலனுக்காக பயன்படுத்துவேன். வெற்றிப் பெறச் செய்த ஸ்டாலினுக்கு நன்றி" என்றார்.

அப்போது, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Intro:நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் 2 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அமோக வெற்றி

Body:இந்திய முழுவதும் இன்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. நாமக்கல்லில் காலை 8 மணியளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் தொடர்ந்து நடைப்பெற்றது.

இதில் திமுக சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ், அதிமுக சார்பில் காளியப்பன்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சாமிநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் பாஸ்கரன் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர். நாமக்கல்லில் மொத்தம் 11,29,610 பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியிருந்தனர்.

நாமக்கல்லில் வாக்குஎண்ணிக்கை மொத்தம் 25 சுற்றுகள் நடைப்பெற்றது. இதில் திமுக வேட்பாளர் சின்ராஜ் 6,26,293 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட காளியப்பன் 3,61,142 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்று படுதோல்வி அடைந்தார். மூன்று இடமாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பாஸ்கரன் 38,531 வாக்குகளையும் பெற்றார்.

திமுக வேட்பாளர் சின்ராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காளியப்பனை விட 2,65151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெற்றி பெற்ற வேட்பாளர் சின்ராஜாக்கு வாழ்த்துக்களை கூறி சான்றிதழும் வழங்கினார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த திமுக வெற்றி வேட்பாளர் சின்ராஜ் தான் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன் எனவும் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஊதியத்தை தொகுதி மக்களின் நலனுக்காக பயன்படுத்துவேன் எனவும் தெரிவித்தார். மேலும் வெற்றி பெற செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.