ETV Bharat / state

நாமக்கல்லில் கனமழை; மருத்துவமனைக்குள் நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி - hospital

நாமக்கல்: ராசிபுரத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மழை நீர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

author img

By

Published : Aug 19, 2019, 11:36 PM IST

நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால், பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமின்றி ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாமக்கல்லில் கனமழை; மருத்துவமனைக்குள் நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

இதுவரை நகராட்சி நிர்வாகமோ மருத்துவமனை நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அங்குள்ள நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு மாற்றாமல் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தவிர ராசிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் புகுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இருட்டும் மழையும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

Intro:நாமக்கல் இராசிபுரத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை... மழை நீர் அரசு மருத்துவமனையில் புகுந்ததால் நோயாளிகள் அவதிBody:ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை கொட்டி தீர்த்தது .
இதன் காரணமாக பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். மேலும் இதுவரை நகராட்சி நிர்வாகமோ அரசு மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் அயர்ந்து தூங்கும் நேரத்தில் கன மழை வந்ததால் தங்கள் குழந்தைகள் உடமைகளை எடுத்துக்கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர் .
மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் தங்களை மற்றொரு வார்டுக்கு மாற்றாமல் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தவிர ராசிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் புகுந்து மின்சாரம் ரத்தாகி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.