ETV Bharat / state

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைகள் சுடும் பணி விறுவிறுப்பு - 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயர் சிலை

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைகள் சுடும் பணி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

Etv Bharatஅனுமன் ஜெயந்தி விழா; 18 அடி ஆஞ்சநேயர் சிலை மாலைக்கு 2050 கிலோ உளுந்த மாவில் ஒரு லட்சம் வடைகள்

author img

By

Published : Dec 20, 2022, 12:32 PM IST

Updated : Dec 20, 2022, 1:03 PM IST

அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல்: அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை அலங்காரத்திற்கு வடை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர தினத்தன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் டிசம்பர் 23ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

இந்த நாளை ஒட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் நடைபெற உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினாலான ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 இலட்சத்து 8 வடைகளை கொண்டு பிரமாண்டமான மாலை அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.

இதனை ஒட்டி ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் வடமாலை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணியினை மேற்கொள்ள திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மேற்பார்வையாளர் ரமேஷ் கூறுகையில், ‘வடை தயாரிக்கும் பணிக்கு 2,050 கிலோ எடையில் உளுத்தம் பருப்பு மாவும், 32 கிலோ மிளகு மற்றும் 32 கிலோ சீரகம் மற்றும் 600 லிட்டர் நல்லெண்ணெய், 125 கிலோ உப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு இரவு பகலாக இப்பணி நடைபெற்று 23ஆம் தேதி அதிகாலை ஆஞ்சநேயருக்கு வடமாலை அலங்காரம் செய்யப்படும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வடபழனி கோயிலில் முறைகேடு - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதி பரிந்துரை

Last Updated : Dec 20, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.