ETV Bharat / state

'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்' - Governor to give nod to online rummy ban

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
author img

By

Published : Nov 27, 2022, 10:30 AM IST

நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.92.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நேற்று (நவ. 26) நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இதன்பின் மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய அரசியலமைப்பு தினத்தில் நாமக்கல் அரசு சட்ட கல்லூரியை தொடங்குவது சிறப்பு. மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். சைபர் குற்றம், இணையவழி குற்றம், பொருளாதார குற்றம், வணிக குற்றம் நடைபெறும் நிலையில் அதற்கேற்ப சட்டக் கல்லூரியில் பாடங்கள் அமைக்கப்படும். அக்குற்றங்களை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று யார் வேண்டுமானலும் சட்டம் படிக்கலாம் என்கிற அளவிற்கு சட்டக் கல்லூரிகள் உள்ளன என தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக மத்திய சட்ட அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதுகுறித்து ஆளுநர் விளக்கத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக கொடியை பயன்படுத்தி வரைந்த உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.