ETV Bharat / state

லாரி தொழிலை நசுக்கும் தமிழ்நாடு அரசு - லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு

நாமக்கல்: குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை மட்டும் லாரிகளில் பொருத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு நிர்பந்திப்பதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குற்றஞ்சாட்டினார்.

லாரி தொழிலை நசுக்கும் தமிழ்நாடு அரசு
லாரி தொழிலை நசுக்கும் தமிழ்நாடு அரசு
author img

By

Published : Nov 23, 2020, 8:58 PM IST

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லாரி தொழிலை மாநில அரசு நசுக்குவதாக குற்றஞ்சாட்டினார்.

பின்னர் மாநில அரசுக்கு வைத்த கோரிக்கைகள்

  • லாரிகளுக்கு 49 நிறுவனங்களின் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை போக்குவரத்துத் துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • இரு நிறுவனங்களின் ஒளிரும் பட்டைகளை (REFLECTED STICKER) மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்து 11 நிறுவனங்களின் ஒளிரும் பட்டைகளை ஒட்ட அனுமதிக்க வேண்டும்.
  • லாரிகளில் வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் ஜிபிஎஸ் (தடங்காட்டி) கருவிகளை 8 நிறுவனங்களில் மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவை கைவிட்டு 140 நிறுவங்களின் தடங்காட்டி கருவிகளைப் பொருத்த அனுமதிக்க வேண்டும்.
  • டீசல் விலை கடந்த நான்கு நாள்களாக உயர்த்துவதை கைவிட வேண்டும்.
  • லாரிகளுக்கான காலாண்டு வரி செலுத்துவதற்கான போக்குவரத்துத் துறை இணையதள முடக்கத்தை உடனடியாகச் சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்" என எச்சரித்தார்.
    லாரி தொழிலை நசுக்கும் தமிழ்நாடு அரசு

    இதையும் படிங்க: மதுரை தீவிபத்து: பழமையான கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.