ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. விதவிதமாக தயாராகும் விநாயகர் சிலைகள்!

Vinayakar chaturthi 2023: வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால், நாமக்கல்லில் பல வண்ணங்களில் விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள் பற்றி விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு...

பல்வேறு உருவில் தயராகவுள்ள விநாயகர் சிலைகள்! ரூ.30 ஆயிரம் வரையில் விற்பனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 7:07 AM IST

பல்வேறு உருவில் தயராகவுள்ள விநாயகர் சிலைகள்! விலை ஏற்றத்தால் ஆர்டர்கள் வரவில்லை என சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை

நாமக்கல்: நாடு முழுவதும் ஆண்டும்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும் பல விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று முதல் 10 நாட்கள் வரை பூஜை செய்து நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம்.

நகர பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் சிலைகளை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்று பூஜைகளும் செய்வார்கள். இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட பொது மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக முன்கூட்டியே விநாயகர் சிலை ஆர்டர் கொடுத்தும் வருகின்றனர்.

அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விவேகமாக நடந்து வந்த நிலையில் முடிவு பெற்றுள்ளது. இதற்காக களிமண், கிழங்கு மாவில் தயார் செய்யப்பட்ட அரை அடி முதல் 15 அடி உயரமுள்ள பல வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு சிங்கம், மயில், மான், எலி போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது போன்றும் பால விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர், ஆனந்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விநாயகர் செய்யப்பட்டு உயரத்திற்கு ஏற்றவாறு 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும், பொது மக்கள், வியாபாரிகள், இங்கு வந்து சிலை வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: Chandrayaan 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் 'சிவசக்தி' : பிரதமர் மோடி அறிவிப்பு!

இது குறித்து சிலை தயாரிப்பாளர் பிரபாகரன் கூறுகையில், "மூன்று தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 15 அடி கொண்ட விநாயகர் சிலை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை தான் விற்பனை செய்து வந்தோம்.

ஆனால் விநாயகர் சிலை செய்வதற்கு தேவையான மூலப் பொருட்கள், பெயிண்ட் போன்றவையின் இரு மடங்கு விலை ஏற்றத்தாலும், ஆட்கள் கூலி 600 ரூபாய் வரை உயர்ந்ததாலும் அதிகபட்சமாக செய்யப்படும் 15 அடி கொண்ட விநாயகர் சிலை 20 ஆயிரம் வரை விற்று வந்த நிலையில் தற்போது 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனையும் சற்று சரிந்து உள்ளது

தமிழகத்தில் விநாயகர் சிலை செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. மின்சார கம்பிகள் இருப்பதால் விநாயகர் சிலை 15 அடியை தாண்ட கூடாது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு விநாயகருக்கு பூசப்படும் வண்ணங்கள் அனைத்தும் இயற்கையாக உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மக்கள், அவரவருக்கு ஏற்றாற் போல கேட்கும் நிறத்தில் விநாயகர் சிலைகள் செய்து தரப்படுகின்றன" என்றார்.

இதையும் படிங்க: Shiv Shakti Point: நிலவில் என்ன செய்கிறது பிரக்யான் ரோவர்.. இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.