ETV Bharat / state

’மதுபான விடுதிகள் நியாயவிலைக்கடைகளாக மாற்றப்படும்’ காந்தியவாதி ரமேஷ் அதிரடி - அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி

நாமக்கல்: குடும்பமே பயன்பெறும் வகையில் மதுபான விடுதிகள் நியாய விலைக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடி மாற்றம் செய்யப்படும் என அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி
author img

By

Published : Apr 7, 2019, 3:22 PM IST

நாமக்கல்லைச் சேர்ந்த அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ். இவர் தினந்தோறும் புதுமையான முறையில் தனது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த வாரம் மகாத்மா காந்தி போல் உடை அணிந்து தேர்தல் செலவினத்திற்காகப் பாரத ஸ்டேட் வங்கியில் 50 லட்ச ரூபாய் கடன் கேட்டிருந்தார். அச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்களது கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாமக்கல்லில் புகழ்பெற்ற மலைக்கோட்டையில் மகாத்மா காந்தி, திரு.வி.க., அண்ணா, கருணாநிதி ஆகியோர் பரப்புரை செய்த மேடையில் அமர்ந்து தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி காந்தியவாதி ரமேஷ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காந்தியவாதி ரமேஷ், ’இன்று எங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். அதில் பொதுமக்களுக்குப் பயன்பெறும்வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்துள்ளோம். குடும்பமே பயன்பெறும்வகையில் மதுபான விடுதிகள் நியாயவிலைக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடி மாற்றம் செய்யப்படும்.

குடிக்கு அடிமையானோர் மறுவாழ்விற்காக மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். புகழ்பெற்ற ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற அரசியல் கட்சிகள் போல் தம்மிடம் பரப்புரை வாகனங்கள் இல்லாத நிலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தைப் பரப்புரை வாகனமாக மாற்றியுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Intro:மதுபானத்தை குடும்பமே பயன்பெறும்வகையில் நியாயவிலைக்கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் - காந்தியவாதி ரமேஷ்

Body:தமிழகத்தில் வருகின்ற 18ம் தேதி மக்களவை மற்றும் பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்மரமாக ஈடுபட்டுவருகின்றனர். திமுக அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ். இவர் தினந்தோறும் புதுமையான முறையில் தனது வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். இவர் கடந்த வாரம் மகாத்மா காந்தி போல் உடை அணிந்து தேர்தல் செலவினத்திற்காக இந்தியன் வங்கியில் கடன் கேட்டிருந்தார்.அந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்களது கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாமக்கல்லில் புகழ்பெற்ற மலைக்கோட்டையில் மகாத்மா காந்தி, திரு.வி.க,அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் பிரச்சாரம் செய்த மேடையில் அமர்ந்து தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காந்தியவாதி ரமேஷ் இன்று தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அதில் பொதுமக்களுக்கு பயன்பெறும்வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்துள்ளோம். குறிப்பாக மது வாங்க குடிமகன்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதனை கருத்திற்கொண்டு நியாயவிலைக்கடைகளில் மலிவான விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்.இதன்மூலம் குடும்பமே பயன்பெறலாம்.மேலும் மதுவிற்காக பல்பொருள் அங்காடி திறக்கவுள்ளதாகவும், குடிமகன்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் புகழ்பெற்ற இராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மற்ற அரசியல் கட்சிகள் போல் தம்மிடம் பிரச்சார வாகனங்கள் இல்லாத நிலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை பிரச்சார வாகனமாக மாற்றியுள்ளார்.

Conclusion:அவர் தினந்தோறும் புதுமையான முறையில் பிரசாரம் செய்வதால் அனைத்து ஊடகங்களும் அவரதுபக்கம் திரும்பியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.