ETV Bharat / state

விவசாயத்திற்கு இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடரும்: அமைச்சர் தங்கமணி

author img

By

Published : May 24, 2020, 5:15 PM IST

நாமக்கல்: விவசாய பயன்பாட்டுக்கான இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடரும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி
மின்துறை அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமெத்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தையும், குமாரபாளையம் அருகே உள்ள வெப்படையில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் மின் துறை அமைச்சர் தங்கமணி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ. 60 லட்சம் மதிப்பில் குமாரபாளையம் அம்மா உணவகத்தின் விரிவாக்கப்பட்ட கூடுதல் கட்டடத்தையும், ஆவத்திபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகளை அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, வெப்படையில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளரிடம் பேசியதாவது;

"கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புதிய மின் இணைப்பு பெற்றவர்களுக்கு மின் மீட்டர் பொருத்துவதாக, ஒரு தனியார் தொலைக்காட்சியில் இன்று காலை செய்தி வெளியானது. அது தவறான தகவலாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., கொண்டுவந்த இலவச மின்சாரத் திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணமாகும். மத்திய அரசின் புதிய மின் திருத்தச் சட்டத்தில் இலவச மின்சாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி வலியுறுத்திள்ளார்.

தமிழ்நாட்டில் இலவச மின்சாரத்தில் எந்தவிதத்திலும் ரத்து செய்யக்கூடாது என்பதுதான் மாநில அரசின் கொள்கையாகும். ஏற்கனவே விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கு தட்கல் திட்டத்தில் மட்டும் மின் மீட்டர் பொருத்தப்பட்டது. அதையும் தற்போது முதலமைச்சர் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். ஒரு மின்மாற்றியில் லோடு திறன் இருந்தால் மட்டுமே, ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக மின்மோட்டாரின் குதிரை சக்தித் திறன் அதிகரிக்க மின்வாரியம் மனுக்களை பெற்று வருகிறது.

ஆழமான நீர்மட்டம் கொண்ட கிணற்றில் இருந்து, அதிக குதிரைத்திறன் சக்தியுள்ள மின் மோட்டாரை பயன்படுத்த ஹெச்.பி., ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் விவசாயிகளின் விருப்பத்தின்பேரில் மட்டுமே செயல்படுத்தப்படும். மேலும் வருகின்ற ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை விவசாயிகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளிக்கலாம்.

இத்திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி கட்டணம் பெறுவது கிடையாது. ஆனால், இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி டெபாசிட் கட்டணம் பெறுவதுபோல தவறான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஒரு மின் இணைப்புக்கு மின்சாரம் அளிக்க மின்வாரியத்திற்கு பல லட்சங்கள் செலவு ஆகிறது. இருந்தபோதிலும், தமிழ்நாடு அரசு, விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவராது. இலவச மின்திட்டத்தில் எந்த சமரசமும் கிடையாது. மாநில அரசின் உரிமையை எந்த நேரத்திலும் முதலமைச்சர் விட்டுக்கொடுக்கமாட்டார் என்றார்.

மின்வாரியத்தில், கேங்மேன் தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று (மே 23) வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, சட்டப்பேரவையில் அறிவித்தபடி, மேலும் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவது குறித்த முதலமைச்சரிடம் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மக்களுக்கு சிறு கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்' - ராமதாஸ் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.