ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே கட்டுப்போட்டுக் கொண்ட நோயாளி! காரணம் என்ன?

சீர்காழி அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்த நபர் செவிலியர் இல்லாததால் தானே அங்கிருந்து மருந்தை வைத்து கட்டுப்போட்டுக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sirkali Government Hospital
சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் தனக்குத்தானே கட்டுப்போட்டுக் கொண்ட நோயாளி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சீர்காழியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினம்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு காலில் அடிபட்ட நிலையில் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் மருத்துவர்கள் இல்லாத நிலையில் காயத்துக்கு கட்டுப்போட செவிலியரும் அந்த நேரம் இல்லாததால் அங்கிருந்த டிஞ்சர் மருந்தை வைத்து அதன் பின்னர் தனக்குத்தானே காலில் கட்டுப்போட்டுக் கொண்ட நோயாளியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மருத்துவருக்கு கத்திக்குத்து; 'திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா?' - தலைவர்கள் கண்டனம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பது போன்றும், புறநோயாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும்போதும் மருத்துவர்கள் இல்லாத நிலை குறித்தும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

இத்தகைய சூழ்நிலையில், தற்போது மீண்டும் சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக வீடியோ வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து தலைமை மருத்துவரிடம் பேசுகையில் இந்த சம்பவம் இரவில் நடந்த சம்பவம் எனவும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.