ETV Bharat / state

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மணிமண்டபத்துக்கு பூமி பூஜை - நாமக்கல் செய்திகள்

நாமக்கல்: மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

sellappanar
sellappanar
author img

By

Published : Oct 27, 2020, 1:03 PM IST

நாமக்கல் அருகேயுள்ள சிவியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன். கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி காலமான செல்லப்பனாரின் நினைவாக, ஏழு அடி உயரம் கொண்ட முழு வெண்கலச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் மற்றும் தமிழ் ஆய்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா, சேந்தமங்கலம் சாலையில் கொண்டம்பட்டிமேடு சிலம்பொலி நகரில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.

தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனாரின் வெண்கலச்சிலை 7 அடி உயரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலும், அவருடைய நினைவு மணி மண்டபம் ரூ.20 லட்சம் மதிப்பிலும், தமிழ் ஆய்வு மையம் ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. தமிழாய்வு மையத்தில் சிலம்பொலியார் பயன்படுத்திய மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இந்த மையம் வெளிநாடு, உள்நாட்டு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாருக்கு மணிமண்டபம் - அடிக்கல்

இந்த‌ விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினர். இதில் ‌சிலம்பொலியார் மகன் கொங்குவேள் மற்றும் குடும்பத்தினர், தமிழறிஞர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மலைவாழ் குழந்தைகளுக்காகப் புத்தகங்களைப் பிச்சை எடுக்கும் தன்னார்வலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.