ETV Bharat / state

வீட்டில் பட்டாசு வெடித்து தீ விபத்து.. கொசு பேட்டை பயன்படுத்தியதால் நிகழ்ந்த விபரீதம்..

Namakkal Crackers Fire Accident: நாமக்கல் அருகே பட்டாசு கடை உரிமையாளர் வீட்டில் கொசு பேட் பயன்படுத்திய போது எதிர்பாராத விதமாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 12:44 PM IST

வீட்டில் பட்டாசு வெடித்து தீ விபத்து

நாமக்கல்: ராசிபுரம் அருகே பட்டாசு கடை உரிமையாளர் வீட்டில் கொசு பேட் பயன்படுத்திய போது எதிர்பாராத விதமாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கண்ணன் (42).

இவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுபித்திரா (வயது 40). இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பட்டாசு தொழில் நடத்தி வரும் கண்ணன், தனது குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக குடோனில் இருந்து சிறிதளவு பட்டாசுகளை எடுத்து வந்து தனது வீட்டில் வைத்துள்ளார்.

அப்போது, கொசுத்தொல்லை காரணமாக கண்ணன் மாடியில் அமர்ந்து கொண்டு கொசு பேட்டை பயன்படுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக அதில் இருந்து நெருப்பு வெளிவந்ததாகவும், பட்டாசு வெடித்து தீ விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பட்டாசு வெடிப்பதை கண்ட கண்ணன் மாடியில் இருந்து தனது வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: கால்நடை தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

வீட்டின் மாடியில் இருந்து பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்ட பொதுமக்கள், உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், வீட்டின் 3வது மாடியில் சிக்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை கயிறு கட்டி கீழே இறக்கி தீயை அணைத்தனர்.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய கண்ணன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் உமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கண்ணனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் 30 சதவீதம் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அனுமதியின்றி பட்டாசு வீட்டில் வைத்து இருந்த கண்ணன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூரை உலுக்கிய நகைக்கடை கொள்ளையன் டீக்காராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.