ETV Bharat / state

'குழந்தைகள் பப்ஜி விளையாட அனுமதிக்கக் கூடாது' - எஸ்பி அருளரசு அறிவுரை

நாமக்கல்: "பப்ஜி கேம்களால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அதனை விளையாட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது" என்று எஸ்பி அருளரசு அறிவுறுத்தியுள்ளார்.

விளையாட தடை
author img

By

Published : Jul 22, 2019, 7:24 AM IST

Updated : Jul 22, 2019, 7:42 AM IST

தமிழ்நாடு வாள்சண்டை போட்டி கழகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வாள் சண்டை போட்டி கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான வாள் சண்டை போட்டியை கடந்த 19ஆம் தேதி நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தொடங்கி வைத்தார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு

இந்நிலையில், குழந்தைகளுக்கான மாநில அளவில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வாள் சண்டை போட்டியின் இறுதிநாளில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பெற்று ஆல் ஓவர் சாம்பியன் பட்டத்தை வென்றது. வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிசுகளை வழங்கினார்.

பரிசு பெற்ற மாணவர்கள்
பரிசு பெற்ற மாணவர்கள்

இதன்பின்னர் விழாவில் பேசிய அவர், "குழந்தைகள் அனைத்து விளையாட்டுகளையும் கற்க வேண்டும். வீட்டினுள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து பல சாதனைகளை புரியவேண்டும். பப்ஜி போன்ற மொபைல் விளையாட்டுகளால் பெரும்பாலன குழந்தைகள் அதனுள் மூழ்கி கிடப்பது வேதனையளிக்கிறது. பெற்றோர்கள் அதனை அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளை இந்த வயதில் வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும். பப்ஜி கேம்களால் மூளையில் சிந்திக்கும் அளவு குறைந்து விடுகிறது. விடுமுறை காலங்களில் ஏதேனும் ஒரு விளையாட்டிற்கு பயிற்சி அளிக்க வேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்தார்

Intro:குழந்தைகள் பப்ஜி விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது - எஸ்பி அருளரசு அறிவுரை

Body:நாமக்கல்லில் குழந்தைகளுக்கான மாநில அளவில் வாள்சண்டை போட்டி மற்றும் பத்தாவது மினி மாநில அளவிலான வாள்சண்டை போட்டிகளில் ஆல் ஓவர் பட்டத்தை பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவில் 39 புள்ளிகளை பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதலாவது இடத்தையும் அதேபோல் சிறுமியர்கள் பிரிவில் 41 புள்ளிகள் பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றது.

தமிழ்நாடு வாள்சண்டை போட்டி கழகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வாள் சண்டை போட்டி கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான வாள் சண்டை போட்டி கடந்த 19ந் தேதி அன்று நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கான மாநில அளவில் வாள் சண்டை போட்டி மூன்று நாட்களாக நடந்த போட்டியில் இன்று இறுதி சுற்று நடைபெற்றது. இதில் முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டம் பெற்று ஆல் ஓவர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றது.

இதில் பேசிய மாவட்ட மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருளரசு "குழந்தைகள் அனைத்து விளையாட்டுகளை கற்கவேண்டும். வீட்டினுள் அடைந்துகிடக்காமல் வெளியே வந்து பலசாதனைகளை புரியவேண்டும். தற்போது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு உள்ளது. பெரும்பாலன குழந்தைகள் அதனுள் மூழ்கி உள்ளனர். பெற்றோர்கள் அதனை அனுமதிக்க கூடாது. குழந்தைகளுக்கு இந்த வயதில் வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும். வெளியே சென்றால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இந்த பப்ஜி போன்ற மொபைல் போனில் விளையாடக்கூடிய விளையாட்டை கைவிடவேண்டும். இதனால் மூளையில் சிந்திக்கும் அளவு குறைந்துவிடும் என்றார்.மேலும் விடுமுறைக்காலங்களில் ஏதேனும் ஒரு விளையாட்டிற்கு பயிற்சி அளிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்." பின்னர் வெற்றிபெற்ற சிறுவர் சிறுமியருக்கு பதக்கங்களையும் சான்றிதழையும் வழங்கினார்.

Conclusion:
Last Updated : Jul 22, 2019, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.