நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம் தொட்டியபட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பிரேமா. இவர், தனது கணவர் முருகன், தனது தாயுடன் இன்று (டிச. 07) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென பையிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது தலையில் ஊற்றிய பிரேமா, “எனக்கு நீதி வேண்டும், முன்விரோதம் காரணமாக கடந்த வாரம் எனது மகனைத் தாக்கிய எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒருதலைபட்சமாகச் செயல்படும் சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோஷங்கள் எழுப்பி தீக்குளிக்க முயற்சித்தார்.
இதனைக் கண்ட பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் மூவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதனைத் தொடர்ந்து மூவரையும் நல்லிபாளையம் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மழைநீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்