ETV Bharat / state

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலி ஊடகவியலாளர் கைது?

நாமக்கல்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாத இதழின் ஆசிரியர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை நல்லிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

Fake journalist arrested in Namakkal RTO office
வட்டார போக்குவரத்து அலுவலரை மிரட்டல் விடுத்த நபர்
author img

By

Published : Jul 30, 2020, 10:01 AM IST

நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வழக்கம் போல் வாகனங்களை ஆய்வு செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை 'ஆயுதம்' என்ற மாத இதழின் நிர்வாக ஆசிரியர் எனக்கூறி அறிமுகம் செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க தனக்கு ஆயிரம் ரூபாயை லஞ்சமாக அளிக்க வேண்டும் எனவும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அளித்த புகாரில் பேரில், நல்லிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், செய்தி ஆசிரியராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் கோவை வடவீதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பதும், இவர் எவ்வித அனுமதியும் பெறாமல் 'ஆயுதம்' என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வருவதும் தெரியவந்தது.

Fake journalist arrested in Namakkal RTO office
கைது செய்யப்பட்ட நபர் ஆசிரியாக இருப்பதாகக் கூறும் ஆயுதம் மாத இதழ்

இதையடுத்து அவர் மீது ஐ.பி.சி 451, 353, 387 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைதல், அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவரை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். மேலும், விஸ்வநாதன் கோவையிலிருந்து முறையாக இ-பாஸ் பெற்று வந்தாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜாதி பெயரைச் சொல்லி துன்புறுத்தல்: ராணுவ வீரரின் மகள் கண்ணீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.