நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக நேற்று அறிவித்தார். இதனையொட்டி நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அரங்கண்ணல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகர, பேரூர், ஒன்றிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும், வரும் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளில் மக்கள் நலப்பணிகளை செய்திட வேண்டும்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை நிர்வாகிகள் அனைத்து பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும், நிர்வாகிகள் அனைத்து பூத் கமிட்டி உறுப்பினர்களையும் சந்தித்து அடுத்தக்கட்ட பணிகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: ரஜினி குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை - கனிமொழி எம்.பி