தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்ப மத்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பீடார் தொகுதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று லாரிகள் மூலம் ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் பாதுகாப்புடன் வந்துள்ளது.
கன்டெய்னரில் 1307 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 1528 மின்னணு வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்களும் வந்துள்ளது. இதனை தேர்தல் அலுவலர்கள் சரிபார்த்து பாதுகாப்பான அறையில் அடுக்கி வைத்தனர். இந்த இயந்திரங்கள் அனைத்தும் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன்!