ETV Bharat / state

தொழில் நுட்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்மார்ட் ஹவுஸ் - இளைஞரின் புதிய முயற்சி! - Erode youngster

தனது வீட்டை அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் ஹவுஸாக மாற்றியுள்ளார் நாமக்கல் பொறியல் பட்டதாரி.

தொழில் நுட்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்மார்ட் ஹவுஸ் - இளைஞரின் புதிய முயற்சி!
தொழில்நுட்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்மார்ட் ஹவுஸ் -இளைஞரின் புதிய முயற்சி!
author img

By

Published : Dec 10, 2020, 1:22 PM IST

Updated : Dec 14, 2020, 1:45 PM IST

அடிப்படைத் தேவைகளாக வகுக்கப்பட்டுள்ள உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில் நுட்பமும் இனி சேர்ந்துவிடுவதுபோல், அடிப்படைத் தேவையான ஒன்றாகிவிட்டது. பிறப்பிலிருந்து இறப்புவரை அறிவியலும், தொழில் நுட்பமும் நம் நிழல்போல கூடவே வளர்ந்துவருகிறது இந்தத் தொழில் நுட்பம். தொழில் நுட்ப வளர்ச்சிப் பல்வேறு வகையில் மனித வாழ்வில் செளகரியத்தையும் அசாத்தியமான மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல.

இதை இப்படி பண்ணலாமே.. .இது இப்படி இருந்திருக்கலாமே என்று எண்ணும் சில செயல்களை அறிவியல் துணையுடன் அசால்ட்டாக பண்ணலாம். அப்படி அறிவியலை தன் வீட்டில் புகுத்தி தனது வீட்டை ஸ்மார்ட் ஹவுஸாக மாற்றியுள்ளார் நாமக்கல் இளைஞர்.

தனது பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் படத்தில் வரும் ஜேம்ஸ் பாண்ட் படக்காட்சிகளைக் கண்ட நாமக்கல்லைச் சேர்ந்த நவீனுக்கு ஏன் இம்மாதிரியான தொழில் நுட்பங்களை நாமும் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எழுந்ததுள்ளது. இதற்கான முயற்சியை 6ஆம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கிய நவீன் பள்ளி படிப்பை முடிக்கும்போது கணினிகளைப் பழுதுநீக்கும் அளவிற்கு கற்றுத் தேர்ந்து அதன்மூலம் வருமானமும் ஈட்டியுள்ளார்.

இதனையடுத்து பொறியியல் படிப்பைச் சேர்ந்த நவீன் கணினி அறிவியலைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். ஆனால் அங்கும் அவருக்கு ஏற்ற நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விரிவான தகவல்கள் கிடைக்காத நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால் படிக்கும்போது இணையதளத்தில் தனது தேடலைத் தொடங்கியவருக்கு அங்கு கிடைத்த ஒவ்வொரு தகவல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றியுள்ளார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மின் விசிறி இயங்குவது, கணினி ஆன் ஆவது, மாலை சூரிய வெளிச்சம் குறைந்த உடன் மின் விளக்குகள் எரிய தொடங்குவது, தானியங்கியாக வீட்டை சுத்தம் செய்யும் ரோபட், உட்கார்ந்த இடத்திலிருந்தே மொபைல் போன் மூலம் வீட்டில் உள்ள பொருள்களான டிவி உள்ளிட்ட மின்சாதன பொருள்களைக் கட்டுபடுத்துவது எனப் பல தொழில்நுட்பப் பணிகளைச் செய்துள்ளார்.

தொழில் நுட்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்மார்ட் ஹவுஸ் - இளைஞரின் புதிய முயற்சி!

அத்தோடு மட்டுமல்லாமல் இந்த உபகரணங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை தனது வீட்டிலேயே எப்போது வேண்டுமானலும் உடனடியாக தயாரிக்கும் வகையில் இயந்திரம் ஒன்றையும் வடிவமைத்து, பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுவருவதோடு பல பொருள்களைத் தயாரித்தும் விற்பனைசெய்தும் வருகிறார் நவீன்.

எந்த ஒரு பொருளுக்கும், தொழில் நுட்பத்திற்கும் வெளிநாடுகளையே நம்பி இருக்காமல் லித்தியன் பேட்டரி மூலம் மின்சுவரை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவரும் நவீன், கல்லூரிப் படிப்பை முடிக்கும்போது 14 நிறுவனங்கள் பணி ஆணைகளை வழங்கியபோது அதனைப் புறந்தள்ளிவிட்டு தான் ஒரு தொழில் முனைவோராகவும், தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளராகவும் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு ஒன்பது ஆண்டு போராட்டத்தில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் நாமக்கல் பொறியல் பட்டதாரி.

மேலும், இன்றைய இளைஞர்கள் படித்து முடித்தவுடன் சம்பளத்திற்குத் வேலைக்குச் செல்லாமல் ஆராய்ச்சியிலும், தொழில் நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதைக் கண்டறிவதில் முனைப்புகாட்ட வேண்டும் என்றும், அம்மாதிரியான இளைஞர்களுக்கு தான் உதவ தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் இளம் தொழில்முனைவோர் நவீன்குமார்.

இதையும் படிங்க...'டீக்கடைக்குள் நூலகம்' - அருவி டீக்கடைக்குள் அறிவை வளர்க்கும் புத்தகங்கள்

Last Updated : Dec 14, 2020, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.