ETV Bharat / state

தமிழ்நாட்டில் மிக விரைவில் மின்சார பேருந்துகள்- விஜயபாஸ்கர் - vijayabaskar

நாமக்கல்: தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

VIJAYABHASKAR
author img

By

Published : Aug 12, 2019, 5:10 AM IST

இந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதவாது,

  • 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட கனரக வாகனங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ( எப்.சி ) புதுப்பித்தல்.
  • புதிய கனரக வாகனங்களை பதிவு செய்யும் காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் முறை.
  • விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு வரும் 13ஆம் தேதி முதல் இ- சலான் மூலம் அபராதம் செலுத்தும் திட்டம்
    namakkal  transport  minister  vijayabaskar  lorry
    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

இது போன்ற திட்டங்களை மிகவிரைவில் செயல்பாட்டுக்கு வரும். கடந்த ஆறு மாதங்களில் மேற்கொண்டுள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சாலை விபத்துகள் கடந்தாண்டை காட்டிலும் 15% குறைந்துள்ளது. நகர்புறங்களில் 90% பேர் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுகின்றனர். இதேபோல் கிராமப்புற இருச்சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.

விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மேலும், விபத்துகள் அதிகம் ஏற்படும் செங்கல்பட்டு - திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தானியங்கி வேகக்கட்டுபாட்டு இயந்திரத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிப்பதற்கு சோதனை நடைபெற்று வருவகிறது. இதேபோல் தமிழகத்தில் அதிக விபத்து நிகழும் ஐந்து நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 825 மின்கலன் பேருந்துகள், இரண்டு ஆயிரம் மின்சார பேருந்துகளும் படிப்படியாக இயக்கப்படும் என தெரிவிதார்.

Intro:தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் கடந்தாண்டை காட்டிலும் 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாகவும், கனரக வாகனங்கள் புதுப்பித்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு.

Body:நாமக்கல்லில்  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட   கனரக வாகனங்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ( எப்.சி ) புதுப்பித்தலும், புதிய கனரக வாகனங்களை பதிவு செய்யும் காலம் 3 மாதங்களுக்கு நீடிக்கும் முறையை விரைவில் அமல்படுத்தப் படும் எனவும்,  விதிமுறைகள் மீறும் வாகனங்களுக்கு வரும் 13 ந் தேதி முதல் இ- செலான் மூலம் அபராதம் செலுத்தும் திட்டம் திருச்சியில் துவக்கப்பட உள்ளதாகவும், கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சாலை விபத்துகள் கடந்தாண்டை காட்டிலும் 15 % குறைந்துள்ளதுள்ளதாகவும், நகர புறங்களில் 90% பேர்  தலைக்கவசம். அணிந்துள்ளனர், கிராம புறங்களில் இருச்சக்கர  வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும்,விபத்துகள் அதிகம் ஏற்படும் செங்கல்பட்டு - திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தானியங்கி வேககட்டுபாட்டு இயந்திரத்தின் மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க சோதனை நடைபெற்று வருவதாகவும், இதே போல் தமிழகத்தில் அதிக விபத்து நிகழும் 5 நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், தமிழகத்தில் 825 மின்கலன் பேருந்துகளை இயக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாகவும், அடுத்தாண்டு மின்சார பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும் எனவும், பி.எஸ்-6  சர்வதேச தரச்சான்று கொண்ட பேருந்துகளை இயக்க ஜெர்மன் நாட்டு கம்பெனியிடம் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது, வரும் ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள், 12 ஆயிரம் பி.எஸ்-6  பேருந்துகள் குறைந்த வட்டி விகிதங்களில் தயாரித்து வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மின்சார மற்றும் bs6 பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.