தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்படி முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.
ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என ஏராளமனோர் ஆர்வமுடன் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். சுயேச்சை வேட்பளர்கள் அதிகளவில் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு 13ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். ஹாக்கி மட்டை, பந்து சின்னத்தில் போட்டியிடும் இவர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தலில் வெற்றிபெற்றால் எனது வார்டில் ஊழலை ஒழிப்பேன், லஞ்சம் வாங்க மாட்டேன், மதுக்கடைகள் இல்லா ஊராட்சியாக மாற்றுவேன், ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 21 வாக்குறுதிகளை 20 ரூபாய் பத்திரத்தில் அச்சடித்து காந்தி வேடமிட்டு அதனை வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பின் உறுமொழி பத்திரத்தில் தெரிவித்தபடி நடந்துகொள்ளவில்லை எனில் தன் மீது வழக்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும், வாக்காளர்களிடம் தெரிவித்து வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: அரசியலில் களமிறங்கியுள்ள 21வயது கல்லூரி மாணவன்!