நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து இன்று (பிப்.15) மீண்டும் 10 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பிப்.11ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து 20 காசுகளும், 13ஆம் தேதி 20 காசுகளும் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 10 காசுகள் விலை உயர்த்தப்பட்டது.
4 நாள்களில் 50 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறுகையில், "தமிழ்நாடு, கேரளாவில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் பண்ணைகளில் முட்டை உற்பத்தி குறைந்தநிலையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் விலை தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் சேகரிப்பு!