நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 காசுகளிலிருந்து 20 காசுகள் உயர்த்தி 5 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டது.
விலை உயர்வு நிலவரம்
முன்னதாக டிசம்பர் 09ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து 15 காசுகளும், டிசம்பர் 12ஆம் தேதி 25 காசுகளும், டிசம்பர் 14ஆம் தேதி 40 காசுகளும், டிசம்பர் 21ஆம் தேதி 10 காசுகளும் உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் விலை உயர்வு
இந்நிலையில், இன்று மீண்டும் ஒரேநாளில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டது. இது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், "கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கேக் செய்யும் பணிக்கு அதிகளவு முட்டை அனுப்பிவைக்கப்பட்டது.
முட்டை நுகர்வு அதிகரிப்பு
அதேபோல், வட மாநிலங்களில் குளிரையொட்டி முட்டை நுகர்வு அதிகரித்ததன் காரணமாக விலை உயர்ந்துகொண்டே வருகிறது. தற்போது, தமிழ்நாடு, கேரளாவிலும் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை வேகமாக உயர்ந்துவருகிறது. இனி வரும் நாள்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது" என்றனர்.
இதையும் படிங்க: முட்டை விலை ஒரேநாளில் உயர்வு - காரணம் இதுதான்...!