நாமக்கல்லில் இன்று (மார்ச்4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் (மார்ச்4) 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, வட மாநிலங்களில் முட்டை நுகர்வு குறைந்து முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டதால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்னணையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாமக்கலில் முட்டை விலை குறைவு!