ETV Bharat / state

கொடநாடு விவகாரத்தில் என்னை சிக்க வைக்க ஸ்டாலின் துடிக்கிறார்- பழனிசாமி ஆவேசம்

நாமக்கல்: கொடநாடு விவகாரத்தில் என்னை சிக்க வைக்க ஸ்டாலின் துடிக்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

author img

By

Published : Apr 11, 2019, 6:16 PM IST

கொடநாடு விவகாரம்

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

"மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். ஆனால் கேரளாவில் இடது சாரியை எதிர்த்து காங்கிரஸ் நிற்கிறது. இது சந்தர்ப்பவாத கூட்டணியாக இருப்பதால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால் எப்படி எதிர் அணியால் நல்ல ஆட்சியை தர முடியும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணிகாக்கபட்ட நிலையில் மக்கள் நிம்மதியாக உள்ளனர். தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க உள்ளனர். ஆகையால் ஸ்டாலின் பொய் பரப்புரை எடுபடாது. அதை நம்ப மாட்டார்கள். பொய்க்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் ஸ்டாலினுக்குதான் தர வேண்டும்.

கொடநாடு விவகாரத்தில் என்னை சிக்க வைக்க ஸ்டாலின் துடிக்கிறார். முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்" எனப் பேசினார்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

ஏப்ரல் 11

நாமக்கல்..

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி   அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள  சாலையில் பரப்புரை மேற்கொண்டு பேசினார் 

அப்போது
நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரச்சனைகளை தீர்க்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் எனவும் தற்போது நல்ல வெயில் அடிக்கிறது. விவசாயிகளின் நலனுக்காக நல்ல திட்டங்களை நிறைவேற்ற இருக்கிறோம் குடிநீருக்காக புதிய திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது அதே போல் நாமக்கல் திருச்செங்கோடு வரை 4 வழி சாலை அமைக்க பட்டுள்ளது
காவிரி நீரின் உபநீரை  தேக்கி வைத்து மாவட்டத்தின் பல வறட்சி இடங்களுக்கு அதை பயன் படுத்த படும் 

நிலையான காவிரி நீர் கிடைக்க தடுப்பணை 400 கோடியில் கட்டபடும்
கோழிபண்ணை தொழில் சிறக்க வாரியம் தனியாக அமைக்க படும் 

ஸ்டாலின் செல்லும் இடங்களில் பொய் பிரசாரம் செய்கிறார் 

ஆனால் தேர்தல் அறிக்கை ஏமாற்று அறிக்கை 

திமுக கட்சி குடும்ப கட்சி இதில் வைகோ கூட்டணி வைத்துள்ளார் 

கொமதேக கட்சி திமுகவிடம் கட்சியை அடமானம் வைத்து உள்ளது
தனியாக கொமதேக நிற்க வேண்டும் அது நியாயம் திமுக வின் சின்னத்தின் நிற்பது சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது 

மீணடும் மோடி பிரதமராக வர வேண்டும் என நாம் கூட்டணி அமைத்து உள்ளோம் ஆனால் கேரளாவில் இடது சாரியை எதிர்த்து காங்கிரஸ் நிற்கிறது இது சந்தர்ப்பவாத கூட்டணியாக இருப்பதால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால் எப்படி எதிர் அணியால் நல்ல ஆட்சியை தர முடியும்
தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணிகாக்கபட்ட நிலையில் மக்கள் நிம்மதியாக உள்ளனர் 

பாலியல் வழக்கில் கைதான  ராஜ்குமார் என்ற திமுகவினர் இது வரை கட்சியில் இருக்கிறார் அவருக்கு திமுக பாதுகாப்பு அளித்து வருகிறது 

தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க உள்ளனர் ஆகையால் ஸ்டாலின் பொய் பிரசாரம் எடுபடாது அதை நம்ப மாட்டார்கள் பொய்க்கு நோபல் பரிசு ஸ்டாலினுக்கு தர வேண்டும் 

கோடநாடு விவகாரத்தில் என்னை சிக்க வைக்க ஸ்டாலின் துடிக்கிறார் ஆனால் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்
ஸ்டாலின் கனவு பொய்யாகி வருகிறது அதற்கு பதிலடி கொடுக்க நேரம் வரும் 

2000 ரூ பணம் தேர்தல் முடிந்து பிறகு தரப்படும் 

உண்மையான அரசு எங்கள் அரசு எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.