நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழி பண்ணைகளில் 5 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளா மற்றும் வட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கோழி இறைச்சி, முட்டைகள் கொண்டு செல்ல சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் தடை செய்துள்ளனர்.
இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. கடந்த வாரங்களில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகளாக இருந்த நிலையில், பறவைக்காய்ச்சல் காரணமாக முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இதனால் கடந்த நான்கு நாள்களில் 50 காசுகள் வரை குறைந்து, இன்று (ஜன.09) 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டை விலையை தொடர்ந்து இன்று கறிக்கோழி விலையும் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் குறைந்து ரூ 72க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: முதுமலை புலிகள் காப்பகம் 10 மாதத்திற்குப் பிறகு திறப்பு!