ETV Bharat / state

நிலக்கரி வாங்கியதில் 950 கோடி ஊழல்: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு - நாமக்கல் அண்மைச் செய்திகள்

நிலக்கரி வாங்கியதில் 950 கோடி ஊழல் நடந்திருப்பதாக கிராம சபைக் கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் சாட்டிய குற்றத்திற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு

author img

By

Published : Jan 20, 2021, 4:23 AM IST

நாமக்கல்: மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் குமாரபாளையத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், நிலக்கரி வாங்கியதில் 950 கோடி ஊழல் செய்துள்ளதாக கூறுவது உண்மையல்ல. ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் உண்மைத் தன்மை என்ன என்றுவென்று கூட தெரியாமல் ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு

கடந்த 2011 முதல் 2015 வரை ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். 2011 முதல் 2015 வரை நான் தொழில்துறை அமைச்சராக இருந்தேன். மின்சாரத்துறை அமைச்சராக இல்லை. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தனிப்பட்ட காழ்புணர்ச்சியில் ஸ்டாலின் ஊழல் என்று சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்.

கடந்த தேர்தலில் குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் ஓராண்டிற்குள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது உண்மை தான். அதற்காக ராஜினாமா செய்வேன் என ஒருபோதும் கூறவில்லை. பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தற்போது நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தத் திட்டத்திற்கு 25 நாள்களுக்குள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’முதலமைச்சர் பழனிசாமி பிரதமரை சந்தித்தது தன்னை காத்து கொள்ளவே’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.