நாமக்கல்: திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 4) இரவு 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அலுவலகத்தில் திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிபாளையம், கபிலர்மலை ஒன்றியங்களை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு பில்கள் சேங்ஷன் செய்து தருவதில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கணக்கில் வராத 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், இளநிலை வரைவு அலுவலர் பசுபதி, உதவியாளர் முத்துசாமி மற்றும் ஒப்பந்ததாரர்கள் என 5 பேரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிமன்றம் கேள்வி