நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் திமுகவின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசாரம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் கலந்துகொண்டு கட்சி தொண்டர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தியூர் செல்வராஜ், “ரஜினி அரசியல் கட்சி தொடங்குவேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. எத்தனை ரஜினி வந்தாலும் எந்த விதத்திலும் திமுகவை பாதிக்காது.
அனைத்து அரசியல் கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” எனத தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கனிமொழி பங்கேற்ற கூட்டம்! - திமுகவினர் மீது வழக்கு!