ETV Bharat / state

கலாம் புகழ் போல் எனது புகழும் நிலைக்க பாடுபடுவேன்! திமுக கூட்டணி வேட்பாளர் அதிரடி - நாமக்கல் வேட்பாளர்

நாமக்கல்: மக்களவைத் தேர்தலில் வென்றால், இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் இறந்த பிறகும் அவரது புகழ் நிலைத்துள்ளதுபோல் என்னுடைய புகழும் நிலைத்து நிற்க பாடுபடுவேன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் கூறியுள்ளார்.

candidate
author img

By

Published : Apr 4, 2019, 10:23 AM IST

Updated : Apr 4, 2019, 10:42 AM IST

இது குறித்து அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ”நான் வெற்றிபெற்றால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேற்றப்படும். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதான தொழில்களான முட்டை ஏற்றுமதியும், லாரி போக்குவரத்து தொழிலும், ஜவுளித் தொழிலும் உள்ளது. தற்போது இந்தத் தொழில்கள் அனைத்தும் நலிவுற்றுள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஜவுளித் தொழில் மிகவும் முடங்கியுள்ளது. நான் வெற்றிபெற்றால் இதில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.

ராஜவாய்க்கால் பிரச்னையும் முட்டை உற்பத்தியில் உள்ள பிரச்னைகளும் களையப்பட்டு தீர்வு காணப்படும். அதேபோல் காவிரி ஆற்றின் கரையோரம் தடுப்பணைகளை அமைத்து விவசாய பாசனத்திற்கு வழிவகை செய்யப்படும். இவையனைத்துமே தற்போது நாமக்கல் மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. எனவே அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

என்னைப் பொறுத்தவரை அரசியல் வாழ்க்கையில் சாதனை செய்யமுடியாது என்பது இல்லை. நிச்சயமாக அனைவராலும் சாதிக்க முடியும். அரசியலில் சம்பாதிக்க வரவில்லை. வேட்பாளராக இருக்கும் இந்த நிலையில் எவ்வித ஊழல் இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளேன். வெற்றிபெற்ற பிறகும் என்னுடைய பைகளை நிரப்ப மாட்டேன்; எவ்வித ஊழலிலும் ஈடுபடமாட்டேன் என சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளேன்.

என்னுடைய பதவியை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டேன். என்னுடைய சொந்த பணிக்காகக்கூட அரசியல் வாகனத்தில் பயணிக்க மாட்டேன். எவ்வித சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் உழைப்பேன். மற்ற மக்களவை உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வேன். இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் இறந்தபிறகும் அவரது புகழ் நிலைத்துள்ளதுபோல் என்னுடைய புகழும் நிலைத்துநிற்க பாடுபடுவேன்” என்றார்.

நாமக்கல் வேட்பாளர் சிறப்பு பேட்டி

Intro:நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுகவின் கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ்வுடன் நேர்காணல்

Body:நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றிப்பெற்றால் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன,தொகுதி நலத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை எவ்வாறு செயல்படத்தபடவுள்ளன போன்ற கேள்விகளை எழுப்பினோம்.

இதுகுறித்து அவர் கூறுகையில் தான் வெற்றி பெற்றால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றவதாகவும் மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் இருந்து வெளியேறுவதை கால்வாய்கள் அமைத்து ஏரி,குளங்களில் நீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் வறட்சி காலங்களில் விவசாய பாசனத்திற்கு நீர் திறக்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை பிரதான தொழில்களான முட்டை ஏற்றுமதியும் லாரி போக்குவரத்து தொழிலும், ஜவுளி தொழிலிலும் உள்ளது. தற்போது இந்த தொழில்கள் அனைத்தும் நசிவுற்றுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஜவுளி தொழில் மிகவும் முடங்கியுள்ளது. வெற்றி பெற்றால் இதில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் என கூறினார்.

ராஜவாய்க்கால் பிரச்சினையும் முட்டை உற்பத்தியில் உள்ள பிரச்சினைகளையும் களையப்பட்டு தீர்வு காணப்படும் என வாக்குறுதி வழங்கினார். அதே போல் காவிரி ஆற்றின் கரையோரம் தடுப்பணைகளை அமைத்து விவசாய பாசனத்திற்கு வழிவகைசெய்யப்படும் என கூறினார்.இவையனைத்துமே தற்போது நாமக்கல் மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. எனவே அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை தன்னிடம் உள்ளது என தெரிவித்தார்.

தன்னை பொருத்தவரை அரசியல் வாழ்க்கையில் சாதனை செய்ய முடியாது என்பது இல்லை.நிச்சயமாக அனைவராலும் சாதிக்க முடியும். தான் அரசியலில் சம்பாதிக்க வரவில்லை. வேட்பாளராக இருக்கும் இந்த நிலையில் எவ்வித ஊழல் இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோன். வெற்றிப்பெற்ற பிறகும் தன்னுடைய பைகளை நிரப்பாமலும் எவ்வித ஊழலிலும் ஈடுபடமாட்டேன் என சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

மேலும் என்னுடைய பதவியை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டேன். என்னுடைய சொந்த பணிக்காக கூட அரசியல் வாகனத்தில் பயணிக்க மாட்டேன் என உறுதியளித்தார்.எவ்வித சாதிபாகுபாடின்றி அனைவருக்கும் உழைப்பேன் என கூறினார்.
மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்வேன் என தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இறந்தபிறகும் அவரது புகழ் நிலைத்துள்ளது போல் என்னுடைய புகழும் நிலைத்து நிற்க பாடுபடுவேன் என உறுதியளித்தார்.

மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் தொகுதிக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் அவரை பற்றியும் எழுப்பிய கேள்விக்கு தான் அரசியலில் புதிதாக வந்துள்ளதாகவும் செல்லும் இடங்கள் அனைத்திலும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.அதனை களைய நடவடிக்கை எடுக்கவே பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார். மற்றவர்களை பற்றி குறைகூறுவதை விட அனைத்து பிரச்சினைகளையும் முன்னின்று தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்

Conclusion:.மேலும் "குறைகளை மறந்துவிடுவோம் நிறைகளை உருவாக்கவே முயற்சி எடுப்போம்" என தெரிவித்தார்.
Last Updated : Apr 4, 2019, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.