ETV Bharat / state

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்: மாவட்ட திமுக பொறுப்பாளர் உதவி - namakkal district news

திமுக கிராம சபை கூட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ் குமார் உதவி செய்தார்.

மாவட்ட திமுக பொறுப்பாளர் உதவி
மாவட்ட திமுக பொறுப்பாளர் உதவி
author img

By

Published : Jan 14, 2021, 3:49 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள 16,500 ஊராட்சிகளில் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டார்.

அப்போது முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் கூறினார். மேலும், தனது குடும்ப வறுமை சூழல் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இதையடுத்து நிகழ்விடத்திலேயே தனது உதவியாளரை அழைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு அறிவுறுத்தினார். அதுமட்டுமில்லாமல் சொந்த நிதியிலிருந்து பண உதவியும் செய்தார்.

இதையும் படிங்க: மருத்துவக் கல்வி பயில நிதி உதவி கோரும் சேலம் மாணவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.