நாமக்கல் மாவட்டத்தில், பரமத்தி வேலூர் பகுதிகளில் தேநீர் கடைகளில் வேலை செய்து, தின்பண்டங்களை விற்று வந்த 5 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வளிக்க, தொழிலாளர் நலத்துறை மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதன்கீழ், பரமத்திவேலூர் பேருந்து நிலையப்பகுதியில் தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு காவல் துறை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 5 சிறுவர்கள் பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய், மக்காசோளம் உள்ளிட்ட தின்பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களை அங்கிருந்த மீட்ட குழுவினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்களில் 4 பேர் பரத்மத்திவேலூர் பகுதியையும், ஒருவர் நாமக்கல் பகுதியையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. 5 பேரையும் மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்களை விசாரித்த மாவட்ட ஆட்சியர் மெகராஜ், அவர்களுக்குத் தக்க அறிவுரைகளை வழங்கியும், திருக்குறள் புத்தகத்தை பரிசாக அளித்தும் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க:
சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி குழந்தையை கடத்திய பெண் கைது.!