ETV Bharat / state

மறு உத்தரவு வரும்வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மூட உத்தரவு - கரோனா செய்திகள்

நாமக்கல்: கரோனா வைரஸ் காரணமாக மறு உத்தரவு வரும்வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், அஞ்சலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்டவற்றை மூட வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

namakkal
namakkal
author img

By

Published : Apr 18, 2020, 1:03 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகன்றன.

அதன்படி, நாமக்கல்லில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மஜீத் வீதி, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் லத்துவாடி உள்ளிட்டப் பகுதிகளில் செயல்பட்டுவரும் 6 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், 2 அஞ்சலகங்கள், 2 காப்பீட்டு நிறுவனங்கள், ஒரு பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட 12 நிறுவனங்களை மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என மாவட்ட கோட்டாட்சியர் கோட்டை குமார் உத்தரவிட்டுள்ளார்.

வங்கிகளை மூட உத்தரவு

மேலும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் பொது மக்களுக்கு தடையின்றி சென்றடைய நடமாடும் ஏ.டி.எம் மையங்கள் ஏற்படுத்த வங்கி மேலாளர்களிடம் பேசப்பட்டுவருகிறது என கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா: நாமக்கல்லில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.