நாமக்கல் ஆட்சியரின் அலுவலகத்தின் பிரதான கட்டடத்தின் முன்பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவலகம் செயல்பட்டுவந்தது. இந்த அலுவலகமானது சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகப் பின்புறத்தில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்திற்கு இடம் மாற்றம்செய்யப்பட்டது.
இதனால் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வரும் வெளியூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்தே புதிய அலுவலகத்திற்குச் செல்லும் நிலை உள்ளது.
இதனைத் தவிர்த்து ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான கட்டடத்திலேயே பழைய இடத்திலோ அல்லது அதன் அருகிலோ மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகள் தவிப்பு: பிரிந்த குடும்பத்தைத் தேடும் மாற்றுத்திறனாளி பெண்!