நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி முறைகேடாக சாயப்பட்டறைகள் இயங்கிவருவதாகவும் இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் மெகராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நாமக்கல் சுகாதாரத் துறை அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ராசிபுரம், கூனவேலம்பட்டி, சந்திரசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுசெய்தனர்.
அப்போது, ராசிபுரத்தில் இரண்டு சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகளும் கூனவேலம்பட்டி பகுதியில் ஒன்றும் சந்திரசேகரபுரத்தில் ஒன்றும் என மொத்தம் நான்கு சாயப்பட்டறைகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டுவந்தது தெரியவந்தது.
உடனடியாக அந்தச் சாயப்பட்டறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அலுவலர்கள் இடித்து தரைமட்டமாக்கினார்.