ETV Bharat / state

காவிரியில் கால்வாய் வெட்டி தண்ணீரைத் திருடிய விவசாய சங்கத் தலைவர்!

நாமக்கல்: இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி காவிரி ஆற்றில் கால்வாய் வெட்டி தண்ணீரைத் திருடி விற்கும் விவசாய சங்கத் தலைவர், அவருக்கு உடந்தையாகச் செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

கால்வாய் வெட்டி தண்ணீர் திருட்டு
கால்வாய் வெட்டி தண்ணீர் திருட்டு
author img

By

Published : Jun 15, 2020, 8:59 AM IST

காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று (ஜூன் 14) காலை நாமக்கல் மாவட்டத்தை வந்தடைந்தது.

அப்படி வந்த தண்ணீரை நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் வாய்க்கால் வெட்டி அரசின் இலவச மின்சாரத் திட்டத்தைப் பயன்படுத்தி சிலர் திருடி விற்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து மோகனூர் நீரேற்றுப் பாசன கூட்டுறவுச் சங்கத் தலைவர் செல்ல. ராசாமணி என்பவர் கூறுகையில், "மோகனூரைச் சேர்ந்த அஜித்தன் என்பவர் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக உள்ளார்.

அவர், தனது 30 ஆடி ஆழக் கிணற்றிற்கு 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் இலவச மின்சார இணைப்பைப் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதே கிணற்றிற்கு மார்ச் மாதம் வணிகப் பயன்பாடு என்ற பெயரில் மேலும் ஒரு மின் இணைப்பைப் பெற்றுள்ளார்.

கால்வாய் வெட்டி தண்ணீர் திருட்டு

இந்த நிலையில் அவர் தனது தோட்டத்தில் வைத்துள்ள ஜல்லிக்கலவை தயாரிப்பு பயன்பாட்டிற்கும், இயந்திரப் பயன்பாட்டிற்கும் தேவையான தண்ணீரை தோட்டம் அருகில் உள்ள காவிரி ஆற்றில் வாய்க்கால் வெட்டி இரண்டு மின் மோட்டார்கள் மூலம் எடுத்துவருகிறார்.

இதேபோன்று பலர் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டுவருவதால் கடைமடைப் பகுதிகள் வரை பாசனத்திற்குத் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே விவசாய சங்கத் தலைவராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அஜித்தன், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி காவிரி ஆற்றில் சட்டவிரோதமாகத் தண்ணீரைத் திருடி விற்பதையும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.