ETV Bharat / state

மலைக்கோட்டையில் ஜாலியாக சுற்றும் காதல் ரோமியோக்கள்: உச்... கொட்டும் பொதுமக்கள்! - couples at dangerous place in malaikottai

நாமக்கல்: மலைக்கோட்டையில் உள்ள ஆபத்தான இடங்களில் காதல் ஜோடிகள் அமர்ந்து அட்டகாசம் செய்வதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

couples at dangerous place
காதல் ரோமியோ
author img

By

Published : Dec 7, 2019, 11:09 PM IST

நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை. திப்புசுல்தான் காலத்தில் உருவான நாமக்கல் மலைக்கோட்டை தற்போது நாமக்கல் மாவட்டத்தின் புராதன சின்னமாக விளங்கிவருகிறது. இந்த மலைக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காதலர்கள் மலைக்கோட்டையின் உயரமான இடங்களில் மக்கள் பார்க்கக்கூடிய இடங்களில் அமர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், தங்களது பெயரை உயரமான இடங்களில் எழுதுவது, செல்ஃபி எடுப்பது உள்ளிட்ட செயல்களை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மலைக்கோட்டையில் ஜாலியாக சுற்றும் காதல் ரோமியோக்கள்

மலைக்கோட்டையில் உள்ள புதர் பகுதிகளில் அமர்ந்து ஒரு சிலர் மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகளும் உணவு, தின்பண்டங்களின் காகிதங்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல்தான் பாதிப்பு அடைகிறது.

குப்பையைச் சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்களும் குப்பைகளை மலைக்கோட்டையிலிருந்து கீழே உள்ள கமலாலய குளத்தில் கொட்டுகின்றனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் மலைக்கோட்டைக்கு வருவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாகக் காதலர் தினத்தன்று, காதலர்கள் செய்யும் சேட்டைகளைக் கட்டுப்படுத்தவே அவர்களை மலைக்கோட்டையில் ஏறுவதற்கு காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டில் இருந்த பெண் எரித்துக் கொலை! போலீஸார் விசாரணை

Intro:நாமக்கல் மலைக்கோட்டையில் ஆபத்தான இடங்களில் அமர்ந்து அட்டகாசம் செய்யும் ரோமியோக்கள்
Body:நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை. திப்புசுல்தான் காலத்தில் உருவான நாமக்கல் மலைக்கோட்டை தற்போது நாமக்கல் மாவட்டத்தின் புராதான சின்னமாக விளங்கி வரும் மலைக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள், காதலர்கள் மலைக்கோட்டையின் உயரமான இடங்களில் மக்கள் பார்க்க கூடிய இடங்களில் அமர்ந்து அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் உயரமான இடங்களில் ஏறி செல்ஃபி எடுத்தும் மலைக்கோட்டையில் உள்ள சுவர்களில் தாங்கள் வந்து சென்றதற்கு அடையாளமாக அவர்கள் தங்களது பெயர்களை எழுதி வைத்து காதல் ரோமியோக்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். மலைக்கோட்டையில் உள்ள புதர் பகுதிகளில் அமர்ந்து ஒரு சிலர் மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதாலும் சுற்றுலா பயணிகளும் உணவு மற்றும் தின்பண்டங்களின் காகிதங்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் மாசு அடைவதோடு அதனை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொள்ளும் நகராட்சி ஊழியர்களும் குப்பைகளை மலைக்கோட்டையிலிருந்து கீழே உள்ள கமலாலய குளத்தில் கொட்டுகின்றனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மலைக்கோட்டைக்கு வருவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் காதலர்கள் தினத்தன்று ரோமியோக்கள் செய்யும் அட்டகாசம் எல்லையே இல்லை. இதனால் ஒவ்வொரு காதலர்கள் தினத்தன்றும் மலைக்கோட்டையில் காதலர்கள் ஏறுவதற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர்.

காதலுக்கு கண் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் செய்யும் காதல் லீலை பார்க்கும் எங்களுக்கும் கண் இல்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.