ETV Bharat / state

கந்துவட்டி தொல்லையால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கந்துவட்டி தொல்லையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Couple commits suicide by drinking poison

author img

By

Published : Aug 22, 2020, 1:52 AM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கருங்கல்கரடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி - மேனகா தம்பதியினர். விசைத்தறி தொழில் செய்து வரும் இவர்களுக்கு, பூஜாஸ்ரீ (14) என்ற மகளும் நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த கோபி என்பவரிடம் மீட்டர் வட்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய சுப்பிரமணி, கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வேலையின்மையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபி தினமும் கடனை திருப்பி செலுத்தும் படியும், வட்டியை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து சுப்ரமணி குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். பின்னர், உயிருக்கு போராடிய சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினரை, அருகிலிந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் சுப்பிரமணி, அவரது மனைவி மேனகா இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக பூஜாஸ்ரீ, நவீன் குமார் இருவரும் உயிர்பிழைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்செங்கோடு நகர காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தாற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் சிலை திருட்டு - மூன்று பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.