நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது; உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆக்சிஜன், ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் 51 பேர் தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு முகாம்களில் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் கரோனா நோயாளிகள் சேலம், திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட சுகாதாரத்துறையினர் சார்பில் நாமக்கல்லில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா சிகிச்சை மையத்தில் 50 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அது பூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி!