கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நாமக்கல்லில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் பங்கேற்ற இருச்சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பைக்கர்ஸ் கிளப்பைச் சேர்ந்த செளபர்ணிக்கா, சங்கீதா, ஆய்ஷா,செளமியா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சித்ரா தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணியர் மாளிகையில் தொடங்கிய இந்த பேரணியானது, சேலம் சாலை முதலைப்பட்டியில் முடிவடைந்தது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளிடையே நகைச்சுவை விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபா சங்கர்