நாமக்கல் நகராட்சியில் கரோனா பரவலைத் தடுக்க 13 வார்டுகளில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தொடர் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நகரில் கரோனா பரவல் வெகுவாக குறையத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் இன்று (ஜூன் 18) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்ற அவர் அங்கிருந்த மக்களிடம் போதுமான அத்தியாவசியப் பொருள்கள் முறையாக கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.