ETV Bharat / state

தேவாலய இடத்தில் பிள்ளையார் சிலை... இரு தரப்பினருடைய ஏற்பட்ட மோதலால் பரபரப்பு! - vinayagar statue issue

நாமக்கல் அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான இடத்தில், இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டதால், இரு தரப்பினருடைய மோதல் ஏற்பட்டது.

clash
இரு தரப்பினருடைய மோதல்
author img

By

Published : Aug 5, 2021, 2:43 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கிரிவலப்பாதை பிரிவில் இம்மானுவேல் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. தேவாலயத்தின் அருகில் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரிவல விரிவாக்க பாதை அமைப்பதற்காகச் சாலை விரிவாக்கத்திற்கு இந்த ஆலயத்தின் ஒரு பகுதியை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அந்த இடத்தை காலி செய்து சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை அந்த இடத்தில் இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டுள்ளனர். இதற்கு கிறிஸ்தவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தேவாலய இடத்தில் பிள்ளையார் சிலை

இந்தப் புகாரைப் பெற்ற காவல்துறையினர், அங்கிருந்து பிள்ளையார் சிலையை எடுக்குமாறு இந்து அமைப்பினரிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் தான் இந்தச் சிலையை அமைத்துள்ளோம். சட்டவிரோதமாக கிறிஸ்தவர்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்தார்கள் என இந்து அமைப்பினரும், பாஜகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், சிலையை அகற்ற வலியுறுத்தி தேவாலயத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, பிள்ளையார் சிலை வைத்திருந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாமியாடி அருள்வாக்கு கூற ஆரம்பித்தார். இந்து அமைப்பினர், கிறிஸ்தவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதன் காரணமாக, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் இளவரசியோடு இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் தீர்வு ஏற்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை வைத்ததாலும், இரு தரப்பினரிடையே மோதல் உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் தவிர்க்க, இரவோடு இரவாக விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

இதில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆடி சனிப் பிரதோஷத்தில் சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.