ETV Bharat / state

வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற சினிமா தயாரிப்பாளர் உள்பட 5பேர் கைது

நாமக்கல்: ராசிபுரம் அருகே சினிமா எடுக்க பணமில்லாததால் வீடுகளில் திருட முயற்சித்த சினிமா தயாரிப்பாளர் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

theft
author img

By

Published : Aug 4, 2019, 4:18 PM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஐந்து பேரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சென்னையச் சேர்ந்த ரவி, கண்ணண், தானேஸ்வரன், வழக்கறிஞர் பிரதீப்சரண், தேனியைச் சேர்ந்த பட தயாரிப்பாளர் பாண்டியன் என்பதும், சினிமா எடுக்க பணம் இல்லாததால் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் ஐந்துபேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து கார், ஆயுதங்கள், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் வழக்கறிஞர் பிரதீப்சரண் மீது திருச்சி காவல்நிலையத்தில் கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Intro:ராசிபுரம் அருகே சினிமா எடுக்க பணமில்லாததால் வீடுகளில் புகுந்து திருட முயற்சித்த சினிமா தயாரிப்பாளர் உட்பட ஐவர் கைதுBody:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக காரில் வந்த 5 பேரை சுற்றிவலைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த ரவி. கண்ணண். தானேஸ்வரன். வழக்கறிஞர் பிரதீப்சரண் மற்றும் தேனியை சேர்ந்த பட தயாரிப்பாளர் பாண்டியன் ஆகியோர் வசதியான வீட்டை தேர்தெடுத்து கொள்ளையில் ஈடுபட முய்ன்றதாக தெரியவந்தது. அதன்படி 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் பிரதீப்சரண் மீது திருச்சியில் கடத்தல் வழக்கு உள்ளது எனவும் மேலும் தேனியை சேர்ந்த பட தயாரிப்பாளர் பாண்டியன் பஞ்சதாங்கி என்ற படத்தை தயாரித்து வருவதாகவும் தற்போது படம் முடியும் தருவாயில் பணம் இல்லாததால் கொள்ளையடிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் நாமகிரிபேட்டை காவல்துறையினர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.