ETV Bharat / state

ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கு: 12 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

நாமக்கல்: ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 12 பேரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ராசிபுரம் குழந்தை
author img

By

Published : Jul 18, 2019, 11:04 PM IST

ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன் என்பவரையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்தனர்.

முகத்தை மறைத்துக்கொண்ட பெண்கள்
முகத்தை மறைத்துக்கொண்ட பெண்கள்

இந்த சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் மகளிர் காவல் துறையினர் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும், கைதானவர்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி இவ்வழக்கினை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தார்.

ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கு

சிபிசிஐடி விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த சாந்தி, பெங்களூரை சேர்ந்த ரேகா, அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் மற்றும் கொல்லிமலையைச் சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி உட்பட 12 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி லதா, குற்றவாளிகள் 12 பேரையும் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Intro:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 12 பேரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 1 வரை நீட்டிப்பு

Body:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன் என்பவரையும் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்யப்பட்டார்.

பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா,அருள்சாமி,செல்வி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் கைதானவர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தமிழக டிஜிபி இவ்வழக்கினை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தார்.

இந்த சிபிசிஐடி போலீசார் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேலத்தை சேர்ந்த சாந்தி என்பவரையும் பெங்களூரை சேர்ந்த ரேகா என்பவரையும் அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார் மற்றும் கொல்லிமலையை சேர்ந்த பாதரியார் கந்தசாமி ஆகியோரை கைதுசெய்தனர். இவ்வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதானவர்கள் 12 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதாவல்லி உட்பட 12 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டன. இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி லதா குற்றவாளிகள் 12 பேரையும் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.