ETV Bharat / state

’மத்திய அரசின் புதிய திட்டத்தால் லாரி தொழிலே நசிந்துவிடும்’

நாமக்கல்: பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால் தமிழகத்தில் ஒரு லட்சம் லாரிகளை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து செயல்படுத்த லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

scrapping
scrapping
author img

By

Published : Feb 6, 2021, 2:42 PM IST

கடந்த ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான ஸ்கார்பேஜ் பாலிசி ஒன்றை வெளியிட்டார். அதில் சொந்த பயன்பாட்டில் உள்ள கார் மற்றும் பைக்குகளை, அதை வாங்கிய தேதியில் இருந்து அதிகபட்சமாக 15 ஆண்டுகள் தான் பயன்படுத்த முடியும். அதன்பிறகும் வாகனம் நல்ல நிலையில் இருந்தால், மேலும் 5 ஆண்டுகள் பயன்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும். அதே போல் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பி.எஸ்.6 என்ஜின் கொண்ட வாகனங்கள் அறிமுகம் ஆகத் தொடங்கியிருப்பதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ்.4 அல்லது அதற்கு குறைவான வெர்ஷன் கொண்ட என்ஜின் உடைய வாகனங்களை, மறுபதிவு செய்து ஓட்ட அனுமதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு லாரி தொழிலை கடுமையாக பாதிக்கும் என்றும், இது பெரு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் சாதகமாக அமையும் எனவும் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடும் உழைப்பின் மூலம் சிறிது சிறிதாக சேமித்த பணத்தை கொண்டு ஒரு லாரியை வாங்கி ஓட்டி வருவதாகவும், திடீரென 15 ஆண்டுகள் ஆன லாரிகளை பழைய இரும்புக் கடைக்கு போட்டு விட வேண்டும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், வேறு தொழிலுக்குதான் செல்ல வேண்டும் எனவும் அவர்கள் புலம்புகின்றனர்.

மத்திய அரசின் இந்த ஸ்கார்ப்பேஜ் பாலிசியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, அரசு இத்திட்டத்தை 2 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்து பழைய வாகனங்களுக்கு முறையான நிவாரணங்களை வழங்கிய பின்னர் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

’மத்திய அரசின் புதிய திட்டத்தால் லாரி தொழிலே நசிந்துவிடும்’

தற்போது தமிழகத்தில் லாரி, பேருந்து, சரக்கு ஆட்டோ என வணிக பயன்பாட்டில் 6 லட்சம் வாகனங்கள் உள்ள நிலையில், புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனக் கூறுகின்றனர் லாரி உரிமையாளர்கள். எனவே, வேறு தொழில் தெரியாத தங்களையும் இந்த லாரியை மட்டுமே நம்பியுள்ள தங்கள் குடும்பத்தினரையும், நிர்கதியாய் நிற்க வைத்து விடக்கூடாது இந்த மத்திய அரசு என்றும் அவர்கள் வேண்டுகின்றனர்.

இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்தப்படும் - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.