நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கடைவீதி பகுதியில் கணேஷ் எண்டர்பிரைஸ் என்ற பெயரில் மளிகை, எலக்ட்ரிக் பொருள்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று (நவ.11) வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று (நவ.12) காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த சக நண்பர்கள், அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கடைக்கு வந்த ஆனந்திற்கு, அங்கிருந்த ரூ. 2.25 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.
பின்னர், அவர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தனர்.
அதில், இரவு வந்த அடையாளம் தெரியாத நபர் கேமராவில் பேப்பர் வைத்து மூடிவிட்டு கடையில் இருந்த பணத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. தற்போது சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல் துறையினர் பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரமக்குடியில் சிறுமியிடம் செயின் பறிப்பு: சிசிடிவி காட்சி வெளியீடு