கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து பேருந்துகளின் இயக்கம் அந்தந்த மாவட்டங்களின் எல்லைகள் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள், தங்களது அன்றாடப் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்திப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் - திருச்சி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வளையப்பட்டி, எம்.மேட்டுபட்டி, மேய்க்கல்நாயக்கன்பட்டி, ஏளூர்பட்டி, தொட்டியம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்கும், தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க நாமக்கல்லுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், நாமக்கல்லில் இருந்து வரும் பேருந்துகள் எம்.மேட்டுபட்டியிலும், திருச்சி, தொட்டியம், முசிறியில் இருந்து வரும் பேருந்துகள் மேய்க்கல்நாயக்கன்பட்டியிலும் நிறுத்தப்படுகின்றன.
இதனால் எம். மேட்டுபட்டியில் இருந்து மேய்க்கல்நாயக்கன்பட்டிக்கு இடையே உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால், அத்தொலைவை கடக்க பொதுமக்கள் சரக்கு ஆட்டோவிலும், தனியார் வாகனத்திலும் 5 கிலோ மீட்டர் தொலைவை கடக்க 50 ரூபாய் கட்டணம் கொடுத்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தொட்டியத்தைச் சேர்ந்த சேவியர் என்பவர் கூறுகையில், "நாமக்கல்லில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வருகிறேன். தினசரி நாமக்கல்லுக்கு சென்று வந்தேன். இப்போது போதிய பேருந்துகள் இல்லாததால் போக்குவரத்திற்கு தினசரி 200 ரூபாய் செலவிடுகிறேன்.
கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதி போக்குவரத்து செலவுக்கே போதுமானதாக உள்ளது.
எனவே, மாவட்ட எல்லைகளில் வசிக்கும் தங்களைப் போன்றோரின் நலன் கருதி மாவட்ட எல்லைகள் வரை பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மாவட்ட எல்லைகள் வரை பேருந்து இயக்கம்: சிரமப்படும் பொதுமக்கள்!
நாமக்கல்: மாவட்டங்களின் எல்லைகள் வரை மட்டுமே, பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.