ETV Bharat / state

சிக்னலே இல்லை... எப்படி ஃபோன் செய்வது... மக்கள் புலம்பல்! - நாமக்கல்

நாமக்கல்: எருமப்பட்டி பேரூராட்சி பகுதியில் சிறு வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிஎஸ்என்எல் சேவை கிடைக்காததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

namakkal
author img

By

Published : Jul 29, 2019, 3:29 PM IST

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் சுமார் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பிஎஸ்என்எல் செல்ஃபோன் சேவையின் சந்தாதாரர்களாக கிட்டத்தட்ட 70 விழுக்காடு மக்கள் இருந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 40 விழுக்காடாகவே உள்ளது.

பிஎஸ்என்எல் சேவை பாதிப்புக்குள்ளான பேரூராட்சி

இந்நிலையில், இங்கு செயல்பட்டுவரும் மின்னணு தொலைபேசி நிலையம் கடந்த எட்டு மாதங்களாக பராமரிப்பில்லாமல் பூட்டிகிடப்பதாகவும், இங்கு செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் செல்ஃபோன் கோபுரம் மூலம் அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொலை தொடர்பை வழங்கி வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிஎஸ்என்எல் செல்ஃபோன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் யாரும் ஃபோன் செய்ய இயலவில்லை என்றும், அதே சமயம் தங்களது ஃபோன்களுக்கும் எந்தவிதமான கால்களும் வருவதில்லை என்றும் இது குறித்து புகார் அளிக்க தொலைபேசி நிலையத்திற்குச் சென்றால் அங்கும் அலுவலகம் கடந்த ஆறு மாதமாக பூட்டியே கிடப்பதாகவும், யாரிடம் இது குறித்து புகார் அளிப்பது என்றே தெரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:நாமக்கல் அடுத்துள்ள எருமப்பட்டியில் கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்ட பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை ...

Body:.நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டிபேரூராட்சியில் சுமார் 15 வார்டுகள்உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் விவசாயம், லாரி தொழில், கோழி பண்ணைதொழில் மற்றும் வணிக நிறுவனங்கள்ஆகியவை செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள சிறிய வணிக  நிறுவனங்கள் மற்றும்  ஊர் மக்கள் பிஎஸ்என்எல்செல்போன் சேவையின் சந்தாதாரர்களாக 70 சதவீதம் பேர்இருந்து வந்தனர்.

ஆனால் தற்போதுஇந்த சந்தாதாரராக  எண்ணிக்கைகுறைவடைந்து 40 சதவீதமாக  உள்ளது.இந்நிலையில் இங்கு செயல்பட்டு வரும் மின்னனு தொலைபேசிநிலையம் கடந்த 8 மாதங்களாக பராமரிப்பில்லாமல் பூட்டிகிடப்பதாகவும், இங்கு செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் செல்போன் கோபுரம் மூலம் அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொலை தொடர்பை வழங்கி வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பி.எஸ்.என்.எல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் யாரும் போன் செய்ய இயலவில்லை என்றும், அதே சமயம் தங்களது போன்களுக்கும் எந்தவிதமான கால்களும் வருவதில்லை என்றும், அத்தோடு இணைய வசதிகளை பெற முடியவில்லை என்றும், இது குறித்து புகார்  அளிக்க தொலைபேசி நிலையத்திற்கு சென்றால் அங்கும் அலுவலகம் கடந்த 6 மாதமாக பூட்டியே கிடப்பதாகவும், இது குறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றே தெரியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 இதுகுறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் கூறுகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பி.எஸ்.என்.எல் செல்போன் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சேவையில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும்,  இதனால் வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்தும், பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதே நிலை நீடித்தால் பி.எஸ்.என்.எல் சேவையில் இருந்த்ய் வெளியேறி விடலாம் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருப்பதாக தெரிவிக்கின்றனர் .

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.