நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள புதுகோம்பை பகுதியில் ஸ்ரீ பாலமுருகன் என்பவரின் பெயரில் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி தலைமையிலான அலுவலர்கள் செங்கல் சூளைக்குச் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, கடந்த ஒன்பது ஆண்டுகளாக திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 48 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றுவது தெரியவந்தது. பின்னர் அவர்களை மீட்ட அலுவலர்கள், சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செங்கல் சூளை உரிமையாளர் இளங்கோவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: பாதுகாப்பு ஒத்திகை: பயங்கரவாதிகள் போர்வையில் இருந்த 7 காவலர்கள் கைது!