நாமக்கல் நகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கமல் ஆலய குளம். உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கிற்காக குளத்தின் அருகே பூங்கா அமைக்கப்பட்டு, குளத்தில் படகு சவாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனைப் பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த நிலையில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், சிலர் சவாரி மேற்கொள்கின்றனர். அப்போது அவர்கள் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து கொண்டும் படகு சவாரி மேற்கொள்வதாகத் தெரிகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் கேட்ட போது, இரவு நேர படகு சவாரியை தடை செய்யநடவடிக்கை எடுப்பதாகவும்; படகு சவாரி மேற்கொள்பவர்கள் கட்டாயம் லைஃப் ஜாக்கெட் அணிய உத்தரவிடுவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.
இதையும் படியுங்க: